சினிமா

வலிமை பட அப்டேட்  வெளியானது, அதிர்ச்சியில் ரசிகர்கள் ….! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் H.வினோத்  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அஜித்யை வைத்து வலிமை என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். அஜித்தின் முந்தைய படம்  நேர்கொண்டபர்வை. இது  இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் தமிழ் ரிமேக் ஆகும். இந்த படத்தினை தமிழில் வினோத்  நடிகர் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார்.

H.VINOTH AND AJITH

இந்த நிலையில்தான் அஜித்தின் அடுத்தப்படத்தினையும் H.வினோத் தான் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. அதன் பின்னர் இந்த படத்திற்கு பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது.
பின்னர் அந்த திரைப்படத்திற்க்கு அஜித்தின் ” V “செண்டிமெண்ட் காரணமாக வலிமை என்று பெயரிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் பூஜை சென்ற ஆண்டே போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால் அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த நிலையில் வலிமை படத்தின் படபிடுப்பும் தடைபட்டுபோனது. இந்த நிலையில்தான் அரசு சினிமா படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்ததன் மூலம் தற்போது வலிமைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்யில் நடைபெற்று வருகிறது.
ஆனால் வலிமை படத்தினை பற்றி இதுவரை எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆகையால் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரியிடம் சமூக வலைதளத்தின் மூலம் கேட்டுக்கொண்டனர்.

ALSO READ  இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

இந்த நிலையிதான் நடிகை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வலிமை திரைப்படம் குறித்து ஒரு அறிவிப்பினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருதத்தார். அதில் ” வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு , படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கும், அனுபவமிக்க தயாரிப்பாளரான  போனி கபூர்  ஆகிய இருவரு ஒருங்கிணைத்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்கவும் , அவர்களது முடிவுக்கு மதிப்பு  தரவும் தரவும் ” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அப்டேட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் அப்படேட் இல்லனு சொல்றதுக்கு ஒரு அப்டேட்டா என்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பதிவையும் ட்ரெண்டாக்கி தங்களிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார்மனு :

Shobika

‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவக்கம் !

News Editor

வெளியாகியது “சூர்யா 40” படத்தின் அடுத்த அப்டேட்..!

News Editor