சினிமா

ரஷ்யாவில் ஹிட்டடித்த பாகுபலி 2- ரஷ்ய தூதரகம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் “பாகுபலி: தி கன்க்லுஷன்” இந்தியாவில் 2017-ல் வெளிவந்தது. இப்படம் உலகளவில் பிரபலமடைந்தது. இப்படம் தற்போது ரஷ்ய தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த வியாழக்கிழமை, ரஷ்ய தூதரகம், டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படம் ரஷ்ய தொலைக்காட்சியில், மிகப் பிரபலமாகி வருகிறது என்ற செய்தியை பகிர்ந்து கொண்டது.

இந்த படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அந்த நாட்டில் ஒரு சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இந்திய சினிமா ரஷ்யாவில் பெரும்பாலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய தொலைக்காட்சி இப்போது எதை ஒளிபரப்பப்பிக் கொண்டிருப்பதை பாருங்கள்… ரஷ்ய மொழியில் பாகுபலி! என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. 

இரண்டு பகுதிகளாக வந்த படத் தொடர்ச்சியின் இறுதி பாகமான இப்படம் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் பதிவுகளையும் முறியடித்து. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ALSO READ  2 டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா..!

தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்காக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டது. மேலும் மலையாளம், கன்னடம், ஜப்பனீஸ், சைனீஸ் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த செய்தியால், இந்தியாவில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த படத்தின் ரஷ்ய கிளிப் வைரலாகிவிட்டது. இந்த பிளாக்பஸ்டர் புராண அதிரடி திரைப்படத்தை ரசித்துப் பார்த்து ஆதரவு அளித்ததற்காக, இந்திய ரசிகர்கள் ரஷ்யாவிற்கும் ரஷ்ய மக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் சார்பில் நன்றி. பசிவாடி பிராணம் (1987)  (நம்ம ஊர் பூவிழி வாசலிலே படம்) என்ற படத்துடன் இந்தப் பட்டியலில் இப்படமும் சேர்ந்துள்ளது என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ  ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

2017 இல் வெளியான ‘பாகுபலி-2’ 1810 கோடி ரூபாய் அளவிலான உலகளாவிய வசூலைப் பெற்றது. முதல் படமான ‘பாகுபலி: தி பிகினிங்’ 2015 இல் வெளியாகி  685 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது.

பெரும்பாலான பயனர்கள் இதை இந்தியாவும் ரஷ்யாவும் பாரம்பரியமாக பகிர்ந்து கொண்ட வலுவான பிணைப்பின் அடையாளம் என்று பாராட்டினர். சிலர் சோவியத் ஒன்றியமாக இருந்த நாட்களிலும் இந்திய திரைப்படங்களும் திரைப்பட நட்சத்திரங்களும் ரஷ்யாவில் பெற்ற ஆதரவை சுட்டிக்காட்டினர்.

கடந்த காலத்தில் ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய நட்சத்திரங்களில் ராஜ் கபூர் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் அடங்குவர்.

 மேலும் பாகுபலி தி பிகினிங் திரைப்படம் 148 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் (Royal Albert Hall) திரையிடப்பட்ட ஆங்கில மொழி அற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்வீட் சர்ப்ரைஸ்… “ராஜா ராணி” ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடிக்கு என்ன குழந்தை தெரியுமா???

naveen santhakumar

பாகுபலி காளகேயகர்களின் மொழியை இனி நாமும் கற்கலாம். எங்கு தெரியுமா???

naveen santhakumar

இரண்டாவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் பிரியா பவானி சங்கர்!

News Editor