சினிமா

தீபாவளிக்கு ‛மாநாடு’ ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதும் சிம்புவின் மாநாடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீபாவளிக்கு சிம்புவின் மாநாடு படத்தை வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 'மாநாடு' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை வெளியிட்ட  யுவன்..! | manadu movie first single release date announced

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‛மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. யுவன் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ALSO READ  அஜித், சூர்யாவை தொடர்ந்து கொரோனா நிதியுதவி அளித்த ரஜினிகாந்த் !

அதேசமயம் அன்றைய தினம் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் ரிலீஸாகிறது.

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு : 'மாநாடு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு-  Dinamani

மேலும் வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தையும் ரிலீஸ் செய்ய பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor

சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

தீபிகா படுகோனேவுக்கு இணையாக மனதை கொள்ளை கொள்ளும் சாயீஷாவின் கியூட் நடனம்..

naveen santhakumar