சினிமா

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த சத்யராஜ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிநிலை தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அனுமதியைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக டி இமான்  இசையமைக்கிறார். மேலும் கதநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்து படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில்  இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ப்ரியங்கா அருள் மோகன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  அழகிய அரக்கி செரின் புகைப்படங்கள்

இந்நிலையில் படத்தினை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா 40 படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

#surya #pandiyaraj #surya40 #priyankaarulmohan #tamilcinema #tamilthisai #sathyaraj


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

naveen santhakumar

அடடே!!!!!!!அந்த நடிகர் கூட…. பிரியா பவானிசங்கர் ஜோடி சேர்ந்திருக்காங்களா?????

naveen santhakumar

இயக்குநராகும் பிரபல நடிகை… என்ன படம் தெரியுமா?

Admin