சினிமா

கின்னஸில் இடம்பெற்ற தமிழ் நடிகர் – குவியும் பாராட்டுக்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2022ஆம் ஆண்டு சாதனையாளர்கள் புத்தகத்தில் நடன இயக்குநர் கோகுல் நாத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர், கோகுல்நாத். நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்கும் இவர், அம்புலி, ஆ, ஜம்புலிங்கம், மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர இவர், கோகுல்நாத் யூனிக் டேலண்ட் அகாடமி’ என்கிற பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.

ALSO READ  முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

இந்நிலையில், கோகுல்நாத்தும், அவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். இதில் கோகுல்நாத் மட்டும் 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக கோகுல்நாத் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் கின்னஸ் சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்த்திக் சுப்பராஜிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் ட்வீட் !

News Editor

மஹாவை தொடர்ந்து சுருதியாக ஹன்சிகா :

Shobika

கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ..!

News Editor