சினிமா

“தி கிரேட் இந்தியன் கிட்சன்” ரீமேக்கில் பிரபல நடிகை ஒப்பந்தம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம். அதனால்  ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 

ALSO READ  ‘அந்தகன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பிறமொழியிலும் ரிமேக் செய்ய பலர் முயற்சித்தனர். அந்தவகையில் இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கவுள்ளார்.  நிமிஷா, சுஜயன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இறுதியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இவரே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா?… என்ன செஞ்சியிருக்கார் பாருங்க!

naveen santhakumar

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன் !

News Editor

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா: வெளியாயது தனுஷ் பட ட்ரெய்லர் ..!

naveen santhakumar