சினிமா

இனிமே டாட்டூ குத்துவேன்…..அனால் எந்த நாதாரி பெயரையும் குத்தமாட்டேன்…..வனிதா அதிரடி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பே பீட்டர் பால் பெயரை வனிதாவும், வனிதாவின் பெயரை பீட்டர் பாலும் கைகளில் டாட்டூ குத்திக் கொண்டனர். சில நாட்களில் பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது வனிதா தனது கையில் இருந்து பீட்டர் பாலின் டாட்டூவை மாற்றி புதிய டாட்டூ குத்தியுள்ளார். இதில் அவர் குத்தியுள்ள புதிய டாட்டூ ஒரு சைனீஸ் சிம்பல் எனவும், அந்த டாட்டூவுக்கு அர்த்தம் “டபுள் ஹாப்பினஸ்” எனவும் வனிதா தெரிவித்துள்ளார்.

ALSO READ  வனிதாவுக்கே டஃப் கொடுப்பாரோ??????

இது குறித்து வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், வனிதாவின் மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா?? என்று கேட்க அதற்கு வனிதா,” டாட்டூ குத்துவேன் ஆனால், மாற்றாத அளவிற்கு தெளிவாக குத்துவேன். இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளேன்” என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்: தொழிலதிபரை மணக்கும் பிரபல நடிகை..

naveen santhakumar

விஜய் சேதுபதியை அவ்வளவு நேசிக்கிறேன்; பாராட்டி தள்ளிய மெகா ஸ்டார் 

News Editor

அடடே!!!!!!!அந்த நடிகர் கூட…. பிரியா பவானிசங்கர் ஜோடி சேர்ந்திருக்காங்களா?????

naveen santhakumar