இந்தியா

புதுச்சேரி பாஜக நியமன MLA மாரடைப்பால் காலமானார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி:

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது .இதில் சட்டசபைக்கு 30 MLA.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை MLA.க்களாக நியமிக்கலாம். இந்த நிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன MLA க்களாக மத்திய அரசு நியமித்தது.

அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, “புதுச்சேரி பாஜக நியமன MLA.க்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்றும் நியமன MLA க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை” என சுப்ரீம் கோர்ட் கூறியது. இதையடுத்து இவ்விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை பாஜக நியமன MLA.வான சங்கர் (70) மாரடைப்பால் காலமானார். இவர் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டசபையில் நியமன MLA.க்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2ஆக குறைந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த 2 பயணிகளுக்கு கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா… 

naveen santhakumar

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

யோகா வீடியோ: மோடிக்கு நன்றி தெரிவித்த இவாங்கா…

naveen santhakumar