இந்தியா

கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மத்திய அரசு அறிவிப்பு!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார், முதற்கட்டமாக 30 கோடிக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் என அளிக்க 24 மணி நேர உதவி மையம் – 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும்.

இந்த செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். இந்த கோவின் மொபைல் செயலியையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ALSO READ  இந்தியாவின் மனிதாபிமானத்தை பாராட்டிய அமெரிக்கா :

அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் Google Play Store அல்லது Apps Store லிருந்து கோவின் செயலியை பொது மக்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரத்தை பதிவு செய்யலாம்.

கோவிட் 19 தடுப்பூசி பிரச்சாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளௌட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கோவின். இதன் மூலம் தடுப்பூசி பயன்படுத்துபவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தை குறிக்க முடியும். பயனாளிகள் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றியவுடன் தடுப்பூசி பெறுவோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்கப்படும். இது தவிர தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

Admin

மோடி அலையால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது – எடியூரப்பா தகவல்

News Editor

பனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை..

Shanthi