சினிமா

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோ- இணையத்தில் வைரல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


சென்னை:-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘வாத்தி கமிங்’, ‘வாத்தி ரெய்டு’, ‘குட்டி ஸ்டோரி’ உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே, தற்போது இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் பலரும் சமூக இடைவெளியுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். முதலில் சிலர் நடனமாட, பின்பு ஒவ்வொருவராக இணைந்துள்ளனர்.

ALSO READ  விஜய் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியிட்டு தேதி அறிவிப்பு!

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.
உடனடியாக ‘மாஸ்டர்’ பாடல்கள் உரிமையை வைத்துள்ள சோனி நிறுவனம் இதனை தங்களது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து “உலக அளவில் ‘மாஸ்டர்’ பாடல்கள் பலருடைய இதயங்களை வென்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

ALSO READ  விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் !

பல்வேறு சமூக வலைதளங்களில் மாஸ்டர் பட பாடல்களுக்கு பலர்  நடனமாடி பதிவேற்றியுள்ளனர். 
இதில் டிக் டாக் செயலியில் பலர் ‘மாஸ்டர்’ பாடல்களுக்கு நடனமாடி பதிவேற்றினர். இவை 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடலை வில்லாய் வளைத்து ஒர்க்அவுட் செய்யும் நடிகை குஷ்பு… வைரலாகும் பிக்ஸ்…! 

naveen santhakumar

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; நடிகர் ரஜினி ட்வீட் ! 

News Editor

அஜித் பட நடிகைக்கு கொரோனா தொற்று ! 

News Editor