சினிமா

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’.  இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இந்த படத்தினை மற்ற மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டத்து.

பின்னர் இந்தியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சாருகான் நடிப்பதாக கூறப்பட்டது, பின்னர் அந்த கதாபாத்திரத்தில் திருப்த்தி இல்லாததால் ஷாருகான் படத்தில் இருந்து விலகினார். அதனையடுத்து விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீரகானும் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. தமிழில் இப்படத்தை தயாரித்த சஷிகாந்த், பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, புஷ்கர், காயத்ரி இயக்குகின்றனர்.

பின்னர் ஒரு சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  உங்கள் பொய் வாக்குறுதிகளை  எங்கள் நிஜ வாக்குறுதி வெல்லும்-ஜி.கே வாசன் 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

naveen santhakumar

‘அன்பறிவு’ படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

News Editor

ரசிகர்களை வாவ் சொல்லவைக்கும் வாணி போஜன்

Admin