சினிமா

‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த படக்குழு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஷால் அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா, மனோ பாலா. சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். பாலசுரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே படத்தின் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் கொரோன காரணமாக  படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்பு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டு படத்தின் அனைத்து பணிகளையும் தற்போது முடித்துள்ளது படக்குழு.

சக்ரா படத்தின் வெளியீட்டுக்கு தயாரான படக்குழு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கிற்கு குறைவான பார்வையாளர்கள் வருகையால் படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து பல தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.ஆனால் மாஸ்டர் படம் வெளியிட்டால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சக்ரா படத்தினை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

ALSO READ  நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு நிச்சயம்…

அதன்படி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி சக்ரா படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு சக்ரா படம் பிப்ரவரி 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் கை கோர்க்கும் அதர்வா……

naveen santhakumar

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

News Editor

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பிரார்த்தனை

naveen santhakumar