சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து இருந்த நிலையில், ஹைதராபாத்திலேயே அறுவை சிகிச்சை பெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Mahesh Surgery In USA, Advised 5 Months Rest

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக மகேஷ் பாபு நடித்து வந்த சர்காரு வாரி பாட்டா படத்தின் ஷூட்டிங்கை இரண்டு மாதம் தள்ளி வைத்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து குணமான பிறகு மகேஷ் பாபு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

பரசுராம் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ALSO READ  ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தானம்..!

இந்நிலையில், #GetWellSoonMaheshAnna என்கிற ஹேஷ்டேக்குகள் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருப்பது அமெரிக்காவிலா அல்லது ஹைதராபாத்திலா என்பது தெளிவாக தெரியவில்லை.
.
இதனிடையே ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுஷாந்த் காதலி ரியாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குநர்கள் போட்டி:

naveen santhakumar

கமல் வீட்டிற்கு லதா ரஜினிகாந்த் திடீர் விசிட்…காரணம் இது தானா ?

Admin

“சாக்லேட் கேர்ள்” ஆக மாறிய நடிகை அமலாபால்

Admin