சினிமா

அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் நடித்து இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தின் கண்ணான கண்ணே பாடல் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. நடிகர் அஜித்- இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவானது “விஸ்வாசம்”. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இமான் இசையமைத்திருந்த இப்படம் 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் ரஜினி நடித்த பேட்டை படத்துடன் களமிறங்கியது. வசூலில் சாதனை படைத்த விஸ்வாசம் தற்போது பாடல் மூலமாகவும் புதிய சாதனையை படைத்துள்ளது.

ALSO READ  ஏ.ஆர் ரகுமான் பிறந்தநாள் பரிசாக'கோப்ரா' படக்குழு கொடுத்த அப்டேட் !

அந்த படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடல் யூடியூப் இல் நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியிருந்தார். தந்தை மகள் உறவை மையமாக வைத்து உருவான இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக திகழும் கண்ணான கண்ணே பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #100loveforkannanakanne என்ற ஹாஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனுஷ்காவை தொடர்ந்து புராணக்கதை சம்மந்தப்பட்ட படத்தில் நடிக்கிறார் சமந்தா :

naveen santhakumar

இரண்டு வாரத்தில் எனிமி டீசர்; படக்குழு அறிவிப்பு !

News Editor

ஹாலிவுட்டில் முதலீடு செய்ய்யும் ஜாக் மா…!

News Editor