சினிமா

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் யோகிபாபு இவர் இல்லாத படங்களே தற்போது இல்லை எனலாம். இவரது தோற்றமே அனைவருக்கும் நகைச்சுவையை தரக் கூடியதாக அமைந்திருக்கிறது.

மேலும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே யோகிபாபுவுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரபலமாவதற்கு முன் யோகி பாபு சிறிய வேடங்களில் நடித்த படங்கள் தற்போது வெளியிடப்பட்டு கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பது போன்ற போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் தனது ரசிகர்கள் ஏமாந்து போவதாக யோகி பாபு வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, மேலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

ALSO READ  வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் :

சில வருடங்களுக்கு முன்பு நிறைய படங்களில் நான் சிறிய சிறிய வேடங்களில் நடித்து இருந்தேன்.அதில் 1 அல்லது 2 காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன்.ஆனால் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போன்று போஸ்டர்கள்  உள்ளன. என்னுடைய படத்தை மட்டும் மையமாக வைத்து போஸ்டர்கள் ஒட்டாதீர்கள்.

ஏனெனில் எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் நான் தான் முக்கிய கதாபாத்திரம் என நினைத்து ஏமாந்து விடக்கூடும்.அதனால் அப்படி செய்யாதீர்கள். 

ALSO READ  பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராமின் மகள் உயிரிழப்பு:

மேலும், சிலர் என்னிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு  கொண்டு உங்கள் புகைப்படத்தை பார்த்து தியேட்டருக்கு சென்றோம்,ஆனால் நீங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறீர்கள்,என்று கூறினர்.அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது.

ரசிகர்களை ஏமாற்றுவது போன்று மட்டும் போஸ்டர்களை அடிக்காதீர்கள்.தயவுசெய்து இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் என்று யோகிபாபு தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !

News Editor

நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

News Editor

காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி !

News Editor