இந்தியா

கொரோனா எதிரோலி: Zomato-ஐ தொடருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்தது Swiggy.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தனது பணியாளர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்விக்கி தனது பணியாளர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 14 சதவீதமாகும். 

துர்திஷ்ட வசமான இந்த இந்த ஆட்குறைப்பு பணியினை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். ஸ்விக்கிக்கு இன்று மிகவும் சோகமான நாட்களில் ஒன்று இன்று தங்களது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஸ்ரீஹர்ஷா மெஜைட்டி (Sriharsha Majety) கூறுகையில்:-

ALSO READ  காகித வடிவ தங்கம் - சிறந்த திட்டம் நாளை தொடக்கம்

கொரோனா பரவல் காரணமாக உணவு விநியோகத் துறையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனம் நஷ்டம் அடைவதை தவிர்ப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். நோட்டீஸ் வழங்கப்பட்டு ஊழியர்கள் அவரது நோட்டீஸ் பீரியட் கணக்கில் கொள்ளப் படாமல் அவர்களுக்காக மூன்று மாத சம்பளம்  வழங்கப்படும். எனினும் தற்பொழுது துறையில் ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானது தான் மிக விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ALSO READ  Azərbaycandakı bukmek

ஸ்விக்கி நிறுவனத்தில் கடந்த ஆண்டு கணக்கின்படி 8,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர் தற்பொழுது ஸ்விக்கி நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒரு மில்லியன் ஆர்டர்கள் வருகிறது. ஆனால் வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னராக ஸ்விக்கி நிறுவனத்திற்கு சராசரியாக 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்கள் வந்தன. 

இதுபோன்று  ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்திற்கு அடுத்த இடத்திலுள்ள ஸோமாட்டோ (Zomato) நிறுவனம் கடந்த வாரம் தனது பணியாளர்களில் கிட்டத்தட்ட 600 பேரை வேலை நீக்கம் செய்தது. இது ஸோமாட்டோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 13% ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா;கௌசிக் பாசு கருத்து!

News Editor

கடலுக்குள் சுதந்திரம் தினம் கொண்டாடிய நீச்சல் வீரர்

News Editor

டோனியை வெட்கப்பட வைக்கும் சாக்ஷி

Admin