இந்தியா

1000 கிலோ மீன், 200 கிலோ இறால்; 10 ஆடுகள்;மருமகனுக்கு சீர் செய்து அசத்திய ஆந்திர மாமனார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தினார்.

Andhra dad gifts newlywed daughter 1000kg fish, 250kg sweets, 10 goats. See  viral videos - Trending News News

தமிழர்கள் ஆடி மாதத்தில் மருமகனுக்கு சீர் கொடுத்துக் கொண்டாடுவதைப் போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான (ஜூன் / ஜூலை மாதங்களில்), ‘பொனாலு’ என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரம் அருகில் உள்ளது. அங்கு ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏனாமைச் சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ஆந்திரம் ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பத்துலா பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.

ALSO READ  இந்தியாவில் எந்த வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.....
Viral: Andhra father gifts 1000kg fish, 250kg sweets, 10 goats, 250 pickle  jars to newlywed daughter on Asadha | Trending & Viral News

தனது மகள் பிரத்யுஷாவைக் கடந்த மாதம் திருமணம் செய்த மருமகன் அன்புடன் கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து மரபுவழி சீர்வரிசையை மனதார அள்ளித் தந்துள்ளார்.

From 1000 kg fish to 10 goats, the newlyweds received gifts that stunned  people | NewsTrack English 1

ஆயிரம் கிலோ மீன்கள், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள், 250 கிலோ மளிகைப் பொருட்கள், 250 வகை ஊறுகாய் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

ALSO READ  2 வது டோஸ் போட்டவர் உடலில் ’காந்த சக்தி’- தடுப்பூசி காரணமா…???

சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தையும் வண்டி வண்டியாக மருமகன் வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை ஏனாம் உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

மேலும், தங்களது இன்னொரு பெண்ணுக்கு திருமணம் முடிந்த பிறகு இதே போல விகுவிமர்சையாக செய்வேன் என்று பலராம கிருஷ்ணா கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முடிவுக்கு வந்தது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் புளூ டிக் சர்ச்சை…! 

naveen santhakumar

Ставки На Dota 2 Bet Boom Букмекерская Компани

Shobika

1win Официальный Сайт Букмекера 1вин Ставки На Спорт 2024

Shobika