இந்தியா

கொரோனா தடுப்பு மருந்தாக இது பலனளிக்கும்: IIT-ன் ஆய்வு முடிவுகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டெல்லி:-

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மற்றும் தேன் மெலுகு (Propolis) இருக்கும் என்று ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஐஐடி தில்லி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் 

(National Institute of Advanced Industrial Science and Technology (AIST)) ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக இது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பான  ஆய்வு கட்டுரை ஒன்று சமீபத்தில் J Biomol Struct Dyn-ல்  வெளியிடப்பட்டது அதில்:-

அஸ்வகந்தா மற்றும் தேனீ தயாரிக்கக் கூடிய பிசின் ஆகியவற்றின் சேர்மானம் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படக் கூடிய திறனைக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வக மற்றும் மருத்துவமனை ரீதியிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அஸ்வகந்தா (Withania somnifera)-ல் இருந்து வித்தனோம் (Withanone (Wi-N)) என்ற பொருளையும், தேனி தயாரிக்கக்கூடிய பிசினில் இருந்து கேஃப்பிக் ஆசிட் பெனிதையல் எஸடர் Caffeic Acid Phenethyl Ester (CAPE) என்ற பொருளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ALSO READ  "المراهنات الرياضية أونلاين 1xbet ᐉ شركة المراهنات 1xbet تسجيل الدخول ᐉ 1xbet Co

இந்தக் கண்டுபிடிப்பானது கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு ஆகும் நேரம் மற்றும் செலவை குறைப்பதற்கு உதவும். அத்துடன், கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தாகவும் இது பயன்படலாம். இந்த சேர்மானத்தை மருந்தாக தயாரிப்பதற்கு சிறிது காலம் ஆகலாம்  என்று கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தில்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) உயிரிதொழில்நுட்ப துறை தலைவர் டி.சுந்தர் (Co-Ordinator Of DAILAB) கூறியதாவது:-

நமது நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது இந்த மருத்துவம் தற்கால மருத்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்றாகும். பாரம்பரிய அறிவையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதற்காக டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பானின் AIST பல தசாப்தங்களாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

ALSO READ  மஹாராஷ்ட்ரா கிராம மக்களுக்கு உதவி வரும் நடிகர் சல்மான் கான்...

மேலும், அஸ்வகந்தாவானது நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் ஒரு பாரம்பரியம் மருந்துப் பொருளாகும். எனவே இவற்றில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இது எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவற்றின் இயற்கை அடிப்படையிலான தன்மைகள் சற்று வீரியமானவை என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று டி.சுந்தர் கூறினார். 

ஏற்கெனவே கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு மாற்றாக அஸ்வகந்தாவை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இதனை ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் உயரும் கொரோனா- ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்…!

naveen santhakumar

இந்தியாவிலேயே நீளமான முடி இவங்களுக்கு தான்.. என்ன Oil Use பண்றாங்க தெரியுமா?

Admin

செப்டம்பர் 5 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித் துறை அமைச்சகம்… 

naveen santhakumar