இந்தியா

முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவேன் என்று கூறிய ‘பாபா’ கொரோனாவால் உயிரிழப்பு- முத்தம் பெற்றோருக்கும் கொரோனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்துவேன் என்ற பாபா ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தை சேர்ந்த அஸ்லாம் பாபா என்பவர் முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்களும் இந்த பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி அஸ்லம் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதையடுத்து அவரிடம் முத்தல் பெற்ற 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை முகாம்களில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ரட்லாம் மாவட்டத்தில் மட்டும் 85க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  புதுச்சேரியில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

இதுகுறித்து ரட்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் திவாரி கூறுகையில்:-

கொரோனா தொற்றால் உயிரிழந்த பாபாவுடன் தொடர்பில் இருந்த 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாபா தங்கியிருந்த நயபுரா (Nayapura) பகுதியைச் சேர்ந்த 150 பேர் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது அந்த ஏரியா முழுவதுமாக சீர்செய்யப்பட்டு கண்டைன்மெண்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  அம்மா எப்ப வருவீங்க?.. 2 வாரங்களுக்கு பின் தாயை பார்த்து கதறிய குழந்தை......

ரட்லம் மாவட்டத்தில் 32 பாபாக்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே ரட்லம் மாவட்டத்தில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 44 பேர் குணமடைந்துள்ளனர், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்- மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி… 

naveen santhakumar

‎olbg Gambling Tips On The App Stor

Shobika

1 மணி நேரத்தில் ரிசல்ட்; விலை 400 ரூபாய்- கான்பூர் ஐஐடி உருவாக்கிய கருவி… 

naveen santhakumar