மருத்துவம்

அந்தரங்க உறுப்பில் ஈஸ்ட் தொற்று-அறிகுறி, மருத்துவம் அறிவோம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அந்தரங்க உறுப்பில் பூஞ்சை தொற்று என்பது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடியது அல்ல. சமயங்களில் இது ஆண்களையும் பாதிக்கிறது.

ஆண்குறியில் ஈஸ்ட்/பூஞ்சை தொற்று:-

ஈஸ்ட்/ பூஞ்சை தொற்றுபொதுவாக உடலின் செரிமான உறுப்பு, வாய், தோல் மற்றும் பிறப்புறுப்பு உறுப்புகளில் வாழ்கிறது. ஆண்களுக்கு இந்த தொற்று உண்டாகும் போது அவை பிறப்புறுப்பில் வரும் போது வேகமாக வளரும் தன்மை கொண்டது. இதை ‘கெண்டிடையசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

இது கேண்டிடா எனப்படும் பூஞ்சையால் இந்த தொற்று உருவாகிறது. இவை எந்த பிரச்சனையும் இல்லாமல் அறிகுறி இல்லாமல் நீண்ட நாள் தங்கியிருக்கும். பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகிறார்கள். 

இந்த சுற்றளவு  சுன்னத் செய்யப்பட்ட ஆண்களை விட மற்றவர்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதும் குறிப்பிடதக்கது. 

ஈஸ்ட்/பூஞ்சை தொற்று அறிகுறிகள்:-

ஆண்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகும் போது ஆண்குறியில் வலி மிகுந்த கட்டியை உண்டாக்குகிறது. ஆண் குறியில் அரிப்பு, சிவந்து போதல், வலிமிக்க கட்டி, உறுப்பில் இருந்து ஒருவித திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் போது ஒரு வித எரிச்சலையும் உண்டாக்குகிறது. 

ஆண்குறியின் தலைப்பகுதியில் தோல் குறுகலை உண்டாக்கி சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும். உடலுறவு கொள்ளும் போது உறுப்பில் வலி அதிகமாகவே இருக்கும்.

ALSO READ  கொரோனா உயிரிழப்பை தடுப்பதற்கான தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிப்பு....

தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:-

ஆண் குறி எப்போதும் ஈரப்பதத்தில் இருப்பதும், பலவீனமான நோய் எதிர்ப்பு கொண்டிருப்பவர்களையும் தாக்குகிறது. அந்தரங்க உறுப்பில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாவை கொல்வதால் இவை ஈஸ்ட் தொற்று வளர்ச்சி அதிகரிக்கிறது. 

ஆண்கள் அதிக இரசாயனம் கலந்த சோப்புகளையும், ஜெல் போன்ற பொருள்களையும் கொண்டு அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வதால் அங்கிருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு தொற்று அதிகரிக்கிறது. 

நடுத்தர வயதில் நீரிழவு நோய், உடல் பருமன், பால்வினை நோயான ஹெச்ஐவி தொற்று இருப்பவர்களுக்கு ஈஸ்ட் தொற்று வருகிறது. 

இதை தவிர, ஏற்கனவே அந்தரங்க உறுப்பில் தொற்று உள்ள பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ளும் போதும் தொற்று எளிதில் பரவி விடுகிறது.  எனவே பாதுகாப்பு இல்லாத முறையில் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். 

இந்த அறிகுறிகளை உணர்ந்ததும் தயங்காமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த அறிகுறி இருந்தால் ஆண் குறியிலிருந்து வெளிப்படும் ஒருவித வெள்ளை நிற திரவத்தை வெளியே எடுத்து பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் வெளிப்படுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். இந்த ஈஸ்ட் தொற்றுக்கு உள்ளான ஆண்கள் பெரும்பாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் உணர்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அறிகுறிகள் இல்லாத நிலையில் இவை நீண்ட நாள் உடலில் தங்கி அந்தரங்க உறுப்பில் புண் அல்லது நமைச்சலை ஏற்படுத்துகிறது. வெகு சிலருக்கு அவை வீக்கத்தை உண்டாக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது அதிக அசெளகரியத்தை சந்திக்கவும் நேரிடலாம்.

ALSO READ  முடி உதிர்தலை தடுக்கும் வெங்காய சாறு

அறிகுறிகள் கண்டதும் என்ன செய்ய வேண்டும்:-

இந்த அறிகுறிகளை கண்டதும் ஆண்கள் முதலில் அந்தரங்க உறுப்பை ஈரப்பதமாக்காமல் உலர்வாக வைத்திருக்க வேண்டும். 

ஈரப்பதமான சூழலில் தொற்றுகள் வேகமாக வளர்கிறது. ஆண் குறியில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவை முழுமையாக குணமடையும் வரை துணையுடன் உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். 

பரிசோதனையில் ஆணுக்கு தொற்று உறுதியானால் அவரது துணைக்கும் சேர்த்து பரிசோதனை செய்யப்படக் காரணமும் இதுதான்.

இது பயப்படகூடிய நோயால்ல. முறையான சிகிச்சை மேற்கொண்டால் விரைவாக சரிசெய்யகூடிய பிரச்சனையே. ஆனால் அலட்சியப்படுத்தகூடாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவை தீவிரமாகும் போது ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் உள்ளுறுப்புகளில் பரவக்கூடும். பிறகு தீவிரமான தொற்றுநோயாக மாறும் என்பதால் ஆரம்ப கட்ட சிகிச்சை அவசியம்.

Miconazole (Lotrimin AF, Cruex, Desenex, Ting Antifungal)

Imidazole (Canesten, Selezen)

Clotrimazole (Lotrimin AF, Anti-Fungal, Cruex, Desenex, Lotrimin AF Ringworm)  போன்ற மருந்துகள் (Oinments) ஈஸ்ட் தொற்று ஏற்பட்டால் பரிந்துரைக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

சரும வியாதிகளுக்கு தீர்வு தரும் செவ்வாழைப் பழம்

Admin

தளர்ந்த மார்பகங்களை சரி செய்வது எப்படி?

News Editor