இந்தியா

“சிலர் வன்முறை திட்டமிட்டுள்ளதால் ஜக்கா ஜாம் போராட்டம் ரத்து”; பாரதிய கிசான் யூனியனின் தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். 

அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டெல்லி புறநகர் எல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள்  ‘ஜக்கா ஜாம்’ எனும் சாலை மறியல் போராட்டத்தை இன்று முதல் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்த ஜக்கா ஜாம் சாலை மறியல் போராட்டம் உத்திரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டும் நடைபெறாது என பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

ALSO READ  சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணையும் கௌதம் மேனன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,”உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சாலை முற்றுகை இருக்காது, இந்த இடங்களில் சிலர் வன்முறையை பரப்ப முயற்சித்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளனஎனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சாலைகளைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். டெல்லியைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் சாலைகள் தடுக்கப்படும். காரணம், அவர்கள் எந்த நேரத்திலும் டெல்லிக்கு அழைக்கப்படலாம், எனவே அவர்கள் காத்திருப்பு நிலையில் வைக்கப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.

#delhifarmer #farmeract #newfarmeract #rakeshtikait #bhartiyakisanunion #jackjam #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 – யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது?

News Editor

இரண்டு மகன்களை கொன்ற தந்தை..! மனைவியால் நேர்ந்த கொடூரம் …!

News Editor

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

Admin