இந்தியா

மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கி வந்த இலவச உணவு தானியங்களை மேலும் 4 நான்கு மாதங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PMGKY:Govt Can Extend Scheme Date,needy Can Get Free Ration Till March -  PMGKY: अगले साल मार्च तक गरीबों को मिल सकेगा 5 किलो मुफ्त राशन, योजना की  अवधि बढ़ाने की प्लानिंग |

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள 26 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY), மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் இந்தியாவில் தொடக்கம்

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராஜ் தாகூர்,

ஏழை, எளிய மக்கள் ரேஷனில் 5 கிலோ உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் சுமார் 80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக மேலும் 53,344 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ALSO READ  வாட்ஸ்அப் பேஸ்புக் பயன்படுத்த கூடாது நூதன ஜாமீன் வழங்கிய நீதிபதி… 

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bewertungen Zu Vulkanvegas Lesen Sie Kundenbewertungen Zu Vulkanvegas Com 4 Von 5

Shobika

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு:

naveen santhakumar

கோடை வெயில் பாதிப்பு – மத்திய அரசு அறிவுறுத்தல்..

Shanthi