இந்தியா

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மேலும் இரண்டு வார காலங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையாததையடுத்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்புகள் நிலவியது.

இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்களை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.orange மண்டலத்தில் வாடகை கார்கள் 2 பயனிகளோடு இயங்கலாம் என்றும் பச்சை மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33 % ஊழியர்களோடு, பேருந்துகள் 50 % பயணிகளோடு இயங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  இந்தியாவின் கோவேக்சின், கோவிஷீல்டுக்கு 96 நாடுகள் அங்கீகாரம் - மத்திய அரசு



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி- பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- இளம்பெண் கைது…

naveen santhakumar

உச்சகட்டம்… இந்த மாநிலத்தை உலுக்கி எடுக்கும் கொரோனா!

naveen santhakumar

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணம் !

News Editor