இந்தியா தமிழகம்

சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு 31ம் தேதி வரை லாக் டவுன்… என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படும்?? யார் யாருக்கு விதி விலக்கு அளிக்கப்படும்??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள 75 மாவட்டங்கள் அடையாளம் கண்டு அந்த மாவட்டங்களில் லாக்டவுன் கொண்டுவர மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதற்காக மத்திய அரசின் அதிகாரிகள் மாநிலங்களின் தலைமைச் செயலாளருடன் ஆலோசித்து 75மாவட்டங்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

இதில் தமிழநாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த விதிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம்:-

பொதுப்போக்குவரத்து முழுவதும் முடக்கப்படும். அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்க தடை விதிக்கப்படும். எனினும் அத்தியாவசிய பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்காக சில பேருந்துகள் இயக்கப்படும்.

ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.

ஆட்டோ, கால்டாக்ஸி, லாரி சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும். 

வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், மற்ற நிறுவனங்கள், ஒர்க் ஷாப், வாரச்சந்தை, காய்கறி்ச்சந்தை, ஜவுளிகடைகள் உள்ளிட்ட அனைத்தின் செயல்பாட்டுக்கும் தடை விதிக்கப்படும்.

ALSO READ  பருவமழை முன்னெச்சரிக்கை - தமிழக அரசு நடவடிக்கை..

பிற மாவட்டங்களோடு இணைக்கும் சாலைகள் மற்றும் எல்லைகள் சீல் வைக்கப்படும். யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே யாரும் நுழைய முடியாது.

மாவட்டங்களுக்கு இடையிலான பஸ்போக்குவரத்து சேவை நிறுத்தப்படும்.

மக்கள் அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். 

மக்கள் தங்களின் அத்தியாவசிய சேவையைப் பெற வெளியே வந்தால், தங்களின் சுயவிருப்பம் கடிதத்தை அளித்த வேண்டும்.

5 நபர்களுக்கு மேல் நிற்பது தடை செய்யப்படுகிறது, அவ்வாறு நின்றால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

கட்டுமானப் பணிகளும் முழுவதும் நிறுத்தப்படும்.

தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். இந்த காலத்தில் பணிக்கு வந்ததாகவே கருதப்பட்டு ஊதியம் வழங்கப்படும். 

ALSO READ  மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.. 

இந்த விதிகளை மீறும் பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

எனினும் இந்த விதிமுறைகளில் சில மாற்றங்கள் வேண்டுமானால் செய்து அமல்படுத்தப்படலாம்.

சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், தீயனைப்புத்துறை, சிறைத்துறை, நியாய விலைக்கடை, மின்சார வாரியம், குடிநீர் வாரியம், நகராட்சி பணியாளர்கள், கரூவூலப் பணி, ஊடகப்பிரிவினர், தொலைத்தொடர்பு துறை, இன்டர்நெட் சேவை, தபால்சேவை, இ-வர்த்தகம், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுகள் வழங்குவோர் இவர்களுக்கு  அளிக்கப்படலாம்.

மேலும், மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், எல்பிஜி நிலையம் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம். 

இவை சம்மந்தபட்ட மாநில அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் முடிவுக்கு ஏற்ப மாறுபடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தை கலக்கும் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்

Admin

வெறிசோடிய தமிழகம்; இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்..!

News Editor

சாதிமறுப்பு திருமண சான்று; மதம் மாறியவர்களுக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

naveen santhakumar