இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 17 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுக்மா:-

சட்டீஷ்கரில் கடந்த சனிக்கிழமை தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு அதிரடி படை , மத்திய ரிசர்வ் படையின் CoBRA படை ஆகியவற்றை சோ்ந்த  600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா். 

கோரச்குடா மலைப் பகுதி அருகே மின்பா கிராமத்தின் வனப்பகுதிக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த சுமார் 250 நக்ஸலைட்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

ALSO READ  வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் நிறுத்தி வைப்போம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி..!

இதில் 14 வீரர்கள்  படுகாயமடைந்தனர். அவர்கள் ராய்ப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, துப்பாக்கி சூட்டின் போது 5 அதிரடிப்படை வீரர்கள் 12 மாவட்ட ரிசர்வ்  படை வீரர்கள் என 17 மாயமாகினர். 

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

இந்த 17 வீரா்கள் நேற்று தேடுதல் படையினர் மூலம் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர் இன்று பஸ்டார் சரக போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார். 

நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி வன்மையாக கண்டித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Казино 1win Играть Онлайн Бесплатно, Официальный Сайт, Скачать Клиен

Shobika

மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அதிரடி தடை:

naveen santhakumar

பாராளமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 தொடங்க திட்டம்

News Editor