இந்தியா

‘துல்லிய தாக்குதல் ஹீரோ’- விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

Wg Cdr Abhinandan Recommended For Vir Chakra By IAF

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

ALSO READ  நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

IAF pilot Wg Cdr Abhinandan Varthaman to be awarded Vir Chakra on  Independence Day - The Statesman

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.

ALSO READ  நவ. 28: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
IAF Group Capt Abhinandan Varthaman awarded Vir Chakra for shooting down  Pakistan's jet in 2019 | India News | Zee News

இதையடுத்து அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ராணுவ கமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் கனரக வாகனங்கள்..

naveen santhakumar

முதன்முறையாக புயல்களின் பெயா் பட்டியலில் தமிழ் பெயர்கள்…!!!

naveen santhakumar

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

Admin