இந்தியா

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுதில்லி

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ (Swiggy, Zomato) போன்ற நிறுவனங்களின் பில் முறைகள், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் விநியோகம் செய்யும் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி முறை உள்ளது. ஸ்விக்கி – ஜொமே ட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் இணைய தள வர்த்தக ரீதியாகத்தான் பணிகளை செய்கின்றன. எனவே இந்த நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன்- ரிசர்வ் வங்கி
Soon, you may have to pay GST on your food order from Zomato, Swiggy |  Business News

அனைவரும் நேரடியாக ஹோட்டல்ளுக்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கும்போது ஜிஎஸ்டி வரி செலுத்தித் தான் உணவு பொருட்களை பெற்று வருகிறோம்.

GST Council to discuss treating food delivery apps as restaurants, levying  5% tax

இந்நிலையில் புதிய ஜிஎஸ்டி வரி திட்டத்தின் மூலம் ஹோட்டலுக்கும் வரி செலுத்தி விட்டு அதனை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஒரு உணவுக்கு இரட்டை வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் அனைத்து உணவுப் பொருட்களின் விலை உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவீன திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்

Admin

விவாதம் இன்றி புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

News Editor

மத்திய பட்ஜெட்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி கருத்து..!

News Editor