இந்தியா

மத்திய பட்ஜெட்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி கருத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று  தாக்கல் செய்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் காகிதம் இன்றி மின்னணு டிஜிட்டல் முறையிலான “ஸ்மார்ட் பட்ஜெட்” நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் புதிதாக பெட்ரோல், டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இராமனின் இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், சீதையின் நேபாளத்தில் 53 ரூபாய், இராவணனின் இலங்கையில் 51 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  ராணுவத்தினர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 89 செயலிகள் எவை??? 

தற்போது இதற்கு அவரின் சொந்த கட்சியிலிருந்தே கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் பலர் பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக அவரின் ட்வீட்டை ரீட்வீட்  செய்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Lean Requirements Traceability Automation Enabled By Model-driven Engineering Pmc

Shobika

“ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் தமிழகத்தில் திருப்திகரமாக இல்லை…

Shobika

தலைநகர் டெல்லியில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்… 

naveen santhakumar