இந்தியா

பனியில் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள்.. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஷ்மீர்:-

உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கும் இந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 சீரற்ற வானிலை, எட்டு அடி ஆழ பணி, இவற்றைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் ஒருவர் நினைத்த 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர் இந்த தாக்குதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

காஷ்மீரின்  வடக்குப் பகுதியான குப்வாரா பகுதியில் அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது. இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 1-ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். இவர்களது காலடித்தடங்களை எல்லை கட்டுப்பாட்டு கோடு (Line of Control) அருகே ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர்.

இவர்களின் கால் தடங்களை வைத்து தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்டறிந்த இந்திய ராணுவம் ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொள்ளும் `ரங்தௌரி பீஹக்’ (Rangdouri Behak) என்ற ஆபரேஷனைத் திட்டமிட்டது.

ALSO READ  18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இணைய சேவை மாற்றம் !
courtesy.

இதற்காக சிறப்பு ராணுவப்படையை சேர்ந்த சுபேதர் சஞ்சீவ் குமார், பால் கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங், தேவேந்திர சிங் ஆகிய வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

ALSO READ  Heartbreaking: காஷ்மீர்- தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லபட்ட தாத்தாவின் உடலைப் பார்த்து கதறி அழுத சிறுவன்!

அங்கிருந்த பாறை ஒன்றில் 2 வீரர்கள் ஏறி நின்று தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர். அப்போது பாறை திடீரென உடைந்து விழுந்து அங்கிருந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர்.

அவர்களை காப்பாற்ற மீதமுள்ள வீரர்கள் சென்றபோது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்திய வீரர்கள் நான்கு பேரும் இப்போரில் இறந்ததாக ராணுவ உயரதிகாரி ராஜு தெரிவித்து இருக்கிறார். மேலும் மற்றொரு வீரரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவித்த அவர், உரிய முறையில் அவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் பாகிஸ்தானில் தயாரானது என்பது தெளிவாக தெரிந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் ப்ளூ டிக் சர்ச்சை முடிவுக்கு வந்தது…! 

naveen santhakumar

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika