இந்தியா

நான் ரொம்ப கெட்ட பொண்ணு… கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நான் ரொம்ப கெட்ட பொண்ணு… கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்…

மும்பையில் தந்தையை, வளர்ப்பு மகள் கொலை செய்து சூட்கேசில் வைத்து ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மிதி ஆற்றின் அருகே கடந்த 2ஆம் தேதி உடல் பாகங்களுடன் சூட்கேஸ் மீட்கப்பட்டது. விசாரணையில் மும்பையை சேர்ந்த 59 வயதுடைய ரெப்பெல்லோ என்று தெரியவந்துள்ளது.

ரெப்பெல்லோ சில நாட்களுக்கு முன்பு ஆராதியா என்ற 19 வயது பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆராதியாவோ அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பையனுடன்
நெருக்கமாக பழகி வந்துள்ளார் .பின்பு அது காதலாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் ஆராதியா தனது காதலுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ளார்.

ரெப்பெல்லோவை தலையில் பலமாக அடித்து கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்துள்ளனர். அவரது உடலை மூன்று நாட்கள் வீட்டின் கழிவறையில் வைத்து, பின்பு உடல் பாகங்கங்களை தனித்தனியே வெட்டி கால்களை ஸ்டவில் வைத்து எரித்துள்ளனர்.

ALSO READ  கோவாக்சின் தடுப்பூசியை கன்றுக்குட்டியின் ரத்தமா ???- மத்திய ராசு விளக்கம் ..!

பின்பு சூட்கேசில் உடல் பாகங்களை வைத்து ஆற்றில் வீசியுள்ளனர்.சூட்கேசில் உள்ள சட்டையில் டைலர் கடையின் பெயர் இருந்துள்ளது. அதனை வைத்து அந்த டைலர் கடைக்கு சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.விசாரணையில் ரெப்பெல்லோவை தனது காதலுடன் சேர்ந்து ஆராதியா கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

ALSO READ  தோனி இடம் அவருக்குத் தான் : உண்மையைச் சொன்ன பிரபல வீரர்

மேலும் அந்த பெண் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது. ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளே என்னை மன்னியுங்கள், நான் மிகவும் தவறான பெண். என ஆராதிய எழுதியுள்ளார்.
மேலும் கொலை குறித்து ஆராதியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை தந்ததால் தான், நான் அவரை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் ஆராதியாவின் வாக்குமூலத்தில் பொய் இருப்பதாக போலீஸார் சந்தேகப்பட்டு வருகின்றனர்.மகளே தந்தையை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செப்டம்பரில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா

News Editor

பிரிட்டனில் வந்தடைந்தது உருமாறிய கொரோனா – தமிழகத்திற்கு அலெர்ட்

naveen santhakumar

ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவைக்கு குவியும் பாராட்டு….அப்படி அந்த நிர்வாகம் செய்தது என்ன????

naveen santhakumar