இந்தியா

பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் துருவாஸ்ட்ரா ஏவுகணை சோதனை வெற்றி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலசோர்:-

ஒடிசாவில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (DRDO) உருவாக்கிய  பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்ககூடிய ஹெலினா (Helicopter-launched Nag Missile (HELINA)) ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. துருவாஸ்ட்ரா ஏவுகணை ஹெலிகாப்டர் இல்லாமல் செயல்படும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைக்கு தற்போது துருவாஸ்ட்ரா (Dhruvastra) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 15,16ம் தேதிகள் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

courtesy.

துருவாஸ்ட்ரா ஏவுகணை எதிரி நாட்டு பீரங்கிகளை துல்லியமாக தாக்கி, அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த ஏவுகணை நேரடி மற்றும் மேல் தளங்களில் இருந்து தாக்கும் தன்மைகொண்டதாகும். அதி வேகமாக சென்று தாக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த துருவாஸ்ட்ரா ஏவுகணைகள் நாக் (Nag) வகையைச் சார்ந்தவை.  இவை 500 மீட்டரில் இருந்து 20 கிலோமீட்டர் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை. மேலும் இவை எல்லா விதமான வானிலைகளிலும் வெற்றிகரமாக சோதனை நடத்தக் கூடியவை.  இவை கடும் வெப்பமான பாலைவனச் சூழ்நிலைகளில் நான்கு கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை. 

ALSO READ  பெங்காலி பெண்களை திருமணம் செய்தால் Rs.40000 பரிசு!

இவை Fire-And-Forget-Class ரகத்தைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை ஏவுகணைகள் ஆகும்.  இவற்றின் நீளம் 1.85 மீட்டர், இதன் எடை 43 கிலோ கிராம். இந்த ஏவுகணைகள் நொடிக்கு 230 மீட்டர் (230 m/s) செல்லக் கூடிய திறன் படைத்தவை. 

ALSO READ  குழாய் வழியாக இயற்கை எரிவாயு….பிரதமர் மோடி பெருமிதம்….

இவை தரையிலிருந்து வான் இலக்கையும், வானிலிருந்து தரை இலக்கையும் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றவை.  துருவ் இலகு ரக ஹெலிகாப்டர்கள் (Dhruv advanced light helicopter) மற்றும் ருத்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்கள் HAL Rudra (ALH WSI) attack helicopter போன்றவற்றில் பொருத்தி இலக்குகளை தாக்கி அளிக்கலாம்.  மேலும் ஏவுகணை தாங்கி வாகனங்களில் (Missile Carrier Vehicle) இருந்து வான் இலக்கை தாக்கிய அழிக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அவதூறு பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

News Editor

“spacewe

Shobika

உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறுகிறது இந்தியா..!!!!!

naveen santhakumar