இந்தியா

சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நாளை தொடக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், 47வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், நடைபெற உள்ள சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். “அருங்காட்சியகங்கள் – நீடித்த நல்வாழ்வு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் கலாச்சார ராஜதந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கலாச்சார மையங்களின் வெளிப்பாடாக இந்தக் கண்காட்சி அமையும். மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதே அருகாட்சியகக் கண்காட்சியின் சின்னம், அருங்காட்சியகத்தின் ஒருநாள் வரைகலை நாவல், இந்திய அருங்காட்சியகங்களின் தொகுப்பு, அருங்காட்சியக அட்டைகள் மற்றும் கடமைப்பாதைக்கான வரைப்படம் ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். சென்னாப்பட்டினத்தின் கலையை சித்தரிக்கும் வகையில் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட நடனமாடும் சிறுமி உருவம் கண்காட்சியின் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது.


Share
ALSO READ  இனி வீடு தேடி வரும் மது- மதுப் பிரியர்களுக்கு நற்செய்தி..! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வித்தியாசமாக விளம்பரம் செய்து, மக்களை ஈர்க்க நினைத்த கடை உரிமையாளருக்கு ஆப்பு:

naveen santhakumar

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு; வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல்..! 

News Editor

வறுமை ஒரு தடையல்ல – ஆச்சரியமூட்டும் தம்பதி – டீக்கடை வருமானத்தில் 25 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்!

News Editor