இந்தியா

2008-ம் ஆண்டு 80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெய்ப்பூரில் உள்ள சௌக் கான்டா, சந்த்போல் கேட், படி சௌபாத், சோட்டி சௌபாத், திரிபோலியா கேட், ஜோரி பஜாா், சங்கனேரி கேட் ஆகிய இடங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி அடுத்தடுத்து தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த பகுதிகள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் பகுதிகளாக இருந்ததால், இந்த சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 185-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ALSO READ  முதல்வருக்கு கொரோனாவா???… 

இதையடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு முகமது சய்ஃப், முகமது சா்வாா் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான், ஷாபாஸ் ஹுசைன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பேரில் 3 போ் தலைமறைவாக உள்ளனா். 2 போ் 2008-ஆம் ஆண்டு தில்லியில் பட்லா ஹவுசில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இவ்வழக்கை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 4 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஷாபாஸ் ஹுசைனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததாலும், அவா் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்படாததாலும், அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரி இணையதளத்தை அணுகுவதில் தொடர்ந்து சிரமங்களை சந்திப்பதாக புகார்

News Editor

மத்திய அமைச்சருக்கு ரஜினி எழுதிய சீக்ரெட் லெட்டர்.. தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்…

naveen santhakumar

தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

Admin