இந்தியா

மத்திய அமைச்சருக்கு ரஜினி எழுதிய சீக்ரெட் லெட்டர்.. தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:- 

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். அதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில்:-

ALSO READ  ரசிகர்களை மிரட்ட வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ :

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்:-

ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades

அதில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதா…?????

Shobika

كيفية إنشاء حساب 1xbet تسجيل الدخول للمراهنين في المغر

Shobika

எனக்கு பாரத ரத்னா,’போதும் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்’: ரத்தன் டாடா ட்வீட் !

News Editor