இந்தியா

சொந்த ஊர் திரும்ப தொழிலாளர்களுக்கு இலவச பேருந்து சேவை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


பெங்களூரு:-

பெங்களூரு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் இலவச அரசுப் பேருந்து சேவை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் ஊரடங்கால் ஆங்காங்கே சிக்கியுள்ள தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வசதியாக, ஞாயிற்றுக்கிழமை (நேற்று) முதல் 3 நாள்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். 

ALSO READ  மீண்டும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி !

இதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ள எடியூரப்பா, ஒரே நேரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் திரண்டுவிடக் கூடாது என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா கால ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை  கர்நாடக அரசு எடுத்திருக்கிறது.

ALSO READ  தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..

முன்னதாக அரசு பேருந்துகளில் சொந்த கிராமங்களுக்கு திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என முன்னர் வெளியான தகவலுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், கர்நாடக அரசு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரோ தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் ஸியோமி (Xiaomi) நிறுவனம்…..

naveen santhakumar

Заработать Деньги В Интернет Новый Казахстан 2

Shobika

சிறிய ரக ஆளில்லா விமானம் (டிரோன்) இயக்குவதற்கு புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிப்பு

News Editor