இந்தியா சுற்றுலா

தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 9 பேர் உயிரிழப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவில் பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தானேபுரம் என்ற பகுதியில் தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு. 26 பேர் படுகாயம்.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தானேபுரம் பகுதியில் நள்ளிரவு 12 மணி அளவில் எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சொகுசு பேருந்தில் சிக்கி படுகாயம் அடைந்த 26 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி ரூபாய் 200 மட்டுமே சீரம் நிறுவனம் அறிவிப்பு!

விபத்து நடந்த அதே இடத்தில் 2 வருடங்களுக்கு முன்பு சொகுசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி பேருந்து விபத்து நேரிடுவதால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கலாம் கொரோனா 3.0- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

naveen santhakumar

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு :

naveen santhakumar