இந்தியா

மாட்டிறைச்சி விற்பனைக்கு விரைவில் தடை…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

கர்நாடக மாநிலத்தில் விரைவில் மீண்டும் மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கர்நாடக பசு வதை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை (Prevention of Cow Slaughter and Preservation Bill) மீண்டும் அறிமுகப்படுத்து குறித்து மாநில அரசு விவாதித்து வருவதாக கால்நடைகள் துறை அமைச்சர் பிரபு சவுகான் (Prabhu Chauhan) கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரபு சவுஹான் கூறுகையில்:-

மீண்டும் பசுவதை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழு மற்ற மாநிலங்களில் எவ்வாறு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் விரைவில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்றார். 

ALSO READ  20 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அமைச்சர் திடீர் கைது!

குஜராத் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த நிபுணர் குழு அந்தம் மாநிலங்களுக்குச் சென்று இது குறித்து ஆராயும் என்று கூறப்படுகிறது. 

தற்போது பசுவதை மற்றும் கால்நடை பாதுகாப்பு 1964 சட்டம் கர்நாடகாவில் நடைமுறையில் உள்ளது இந்த சட்டத்தின்படி எருதுகள் காளைகள் மற்றும் எருமைகள் போன்றவற்றை வெட்டுவதற்கு விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Prevention of Slaughter and Preservation of Cattle Bill- 2010 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இந்த சட்டத்திற்கு கிடைக்கவில்லை இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவி ஏற்றது அதைத் தொடர்ந்து இந்த மசோதா ரத்து செய்யப்பட்டு 1964 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

ALSO READ  இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம் - மன்னிப்புக்கோரியது கூகுள்…!

மேலும் பசு பாதுகாப்பு ஆணையம் (Cow Protection Commission (Goseva Aayoga)) மாநிலத்தில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்தார். இந்தப் பசு பாதுகாப்பு ஆணையம் 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது எனினும் பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இந்த ஆணையம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மாநிலத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விலங்குகள் நல ஆணையம் (Animal Welfare Board) ஏற்படுத்தப் பட்டுள்ளது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் முதலில் பசு பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்துவதே குறிக்கோளாக உள்ளது குறிப்பிடப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில்களை இயக்க முடிவு

News Editor

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக நீதிபதி சந்திரசூட் நியமனம்!

Shanthi

எல்லைத் தாண்டியும் இந்தியா தீவிரவாதிகளை அழிக்கும்

Admin