இந்தியா

கேரளா மாநிலத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்ய முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. மாநில அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என அரசு கருதுகிறது.

ALSO READ  ம.பி.-பசு பாதுகாப்பு கும்பலின் மாவட்டத் தலைவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை… 
Covid-19 2nd wave: Full list of weekend curfews, lockdowns imposed across  states - Coronavirus Outbreak News

எனவே கேரளா அரசு சார்பில் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தற்போதுள்ள ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கு தேவையில்லை என்பது குறித்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இனி முழு ஊரடங்கு அமல்படுத்த அவசியமில்லை. முழு ஊரடங்கால் மாநிலத்தின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….
COVID: Night curfew begins in Kerala, but experts unsure of its  effectiveness- The New Indian Express

கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியே சென்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு தொற்று ஏற்பட்டவர்களின் சொந்த செலவில் தனி முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் என முதல்வர் பினராயி விஜயன் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

TikTok- கினால் அதிக நேரங்களை செலவழிக்கும் இந்திய மக்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika

கேரளாவில் 1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் !

News Editor