இந்தியா

புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்: இனி M.Phil படிப்புகள் நிறுத்தம், உயர்கல்விக்கு இடையே விடுப்பு! – மத்திய அரசு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

புதிய கல்விக் கொள்கையின் படி இனி ஆய்வியல் நிறைஞர் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில்  புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவாக ‘மனித மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்’, ‘மத்திய கல்வி அமைச்சகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மத்திய கல்வி அமைச்சகம் என்ற பெயரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்று மாற்றினார். அதை தற்போது மீண்டும் முந்தைய பெயருக்கே மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ALSO READ  டெல்லி மாசுக்கு பாக். தான் காரணம்; உ.பி. அரசு - பாக். தொழிற்சாலைகளை தடை செய்ய சொல்றீங்களா உச்ச நீதிமன்றம்

அப்போது, உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் கரே, அதன் விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அவர் பேசுகையில்:-

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. உயர்கல்வி படிப்புகளில் படிப்புக் காலத்தில் ஓராண்டோ, ஈராண்டோ சில காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம். அதாவது பொறியியல் போன்ற உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஆன்லைன் சூதாட்டம் - மத்திய அரசு கருத்து..

2030-ஆம்  ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். M.Phil படிப்புகள் நிறுத்தப்படுகிறது. 

புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, ஆரம்பக் கல்வியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் தாய்மொழி கல்வியே படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையின் படி அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சீர்திருத்தங்கள்:-


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

تنزيل 1xbet => جميع إصدارات 1xbet Sixth V 1116560 تطبيقات المراهنات + مكافأة مجاني

Shobika

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு….

naveen santhakumar

லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது:

naveen santhakumar