இந்தியா

விவசாயிகளுடனான 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 56வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்ச வார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.   

இந்நிலையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நேற்று முன்தினம் 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைக்க தயார் என கூறியிருந்தது. அதனை கேட்டுக்கொண்ட விவசாயிகள் இது குறித்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில்  வேளாண் சட்டம் தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு இன்று 11 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

ALSO READ  'யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்ககூடாது'  டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனையடுத்துகு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

News Editor

கேரளாவில் புல்லட்டுகளில் கெத்தாக வலம் வரும் பெண் போலீசார் காரணம் என்ன….

naveen santhakumar

ராகுலிடம் நான் தவறாக மொழிபெயர்க்கவில்லை-முதல்வர் நாராயணசாமி விளக்கம்

naveen santhakumar