இந்தியா

விவசாயிகள் உடனான 11 கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 56வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்ச வார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.   

இந்நிலையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நேற்று முன்தினம் 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைக்க தயார் என கூறியிருந்தது. அதனை கேட்டுக்கொண்ட விவசாயிகள் இது குறித்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில்  வேளாண் சட்டம் தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகிறது. இதில் சுமுகமாக முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
ALSO READ  2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விவரம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்கம்- மாநகர போக்குவரத்துக் கழகம்..!

naveen santhakumar

2021 ஜூன் வரை இலவச ரேஷன் அரிசி… 

naveen santhakumar

மழை நிவாரணம் ரூ.5000… இன்று முதல் விநியோகம் தொடக்கம்!

naveen santhakumar