இந்தியா

கொரோனா நிலவரம் குறித்து 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிகளையும் செய்து வருகிறது. 

இந்த கூட்டங்களில் அந்தந்த மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்ததோடு, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.இந்நிலையில்  கொரோனா பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிரா, கேரளா, மேற்குவங்காளம், குஜராத், சட்டீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி,ஹரியானா ஆகிய 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் பங்கேற்றார்.

ALSO READ  வேளாண் சட்டங்களின் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம்,அனுபவிக்கலாம்-பிரதமர் மோடி :

இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தல், கொரோனா தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி,ஹரியானா போன்ற மாநிலங்களில் வைரஸின் அடுத்த அலை உருவாக தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமடையலாம் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் மீண்டும் பொது ஊரடங்கை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு.. பள்ளி மீது புகார்..

Shanthi

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

News Editor

1XBET Mobile APK Smartfon proqramını yükləy

Shobika