இந்தியா

ஒட்டகப்பால் வேண்டி பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த பெண்மணி… ரயில்வே அதிரடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது மூன்றரை வயது மகனுக்காக ஒட்டகப்பால் வேண்டி பிரதமருக்கு ட்விட் செய்ததையடுத்து 20 லிட்டர் ஒட்டகப்பால் இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நேஹா குமாரி என்ற பெண்மணி ஒருவரின் மூன்றரை வயது குழந்தைக்கு ஆட்டிசம் (Autism) குறைபாடு மற்றும் கடும் உணவு ஒவ்வாமை (Severe Food Allergies) ஆகியவை இருந்துள்ளது. இதன் காரணமாக அந்தக் குழந்தைக்கு பசும்பால், எருமைப்பால் மற்றும் ஆட்டுப்பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணத்தால் ஒட்டகப்பாலை மட்டும் அளித்து வந்துள்ளார். அதேபோல் சிறிதளவு தானியங்கள் மட்டுமே அந்த குழந்தை உண்டு வந்துள்ளது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் ஒட்டகப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்திர் அந்தப் பெண்மணி.

நேஹா குமாரியின் டுவிட்டர் பதிவில்:- 

தனது குழந்தைக்கு ஆட்டிசம் மற்றும் உணவு ஒவ்வாமை பிரச்சனைகள் இருக்கிறது குழந்தை ஒட்டகப் பால் மற்றும் சிறிதளவு தானியங்களைக் கொண்டே உயிர் வாழ்கிறான். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் ஒட்டகப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவுகூர்ந்து ராஜஸ்தான் மாநிலம் சாத்ரி-லிருந்து (Sadri) ஒட்டகப் பால் அல்லது ஒட்டகப்பால் பவுடரோ எனக்கு அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ALSO READ  ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

இதை எடுத்து இந்திய ரயில்வே சம்பந்தப்பட்ட பெண்மணியின் குடும்பத்தினருக்கு 20 லிட்டர் ஒட்டகப்பால் ராஜஸ்தானில் இருந்து வரவழைத்து வழங்கியுள்ளது. மேலும் அந்த குடும்பத்தினர் இதேபோன்ற ஒட்டகப் பால் தேவை உள்ள மற்றொரு குடும்பத்திற்கு இந்த பாலை பகிர்ந்து அளித்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அருண் போத்ரா என்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் ட்விட்டர் பதிவு மூலம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக நேஹா குமாரியின் டுவிட்டர் பதிவை கண்ட ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா  ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப் பால் பவுடர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஆத்விக் ஃபுட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒட்டகப் பால் பவுடர் கேட்டுள்ளார். ஆனால் அந்த பால் பவுடரை மும்பைக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து Chief Passenger Traffic Manager, North Western Railway (NWR), Tarun Jain கூறுகையில்:-

இந்த தொடர் பதிவை கண்டவுடன் நான் இதுகுறித்து அஜ்மீரில் உள்ள மூத்த அதிகாரியான மகேஷ் சந்த் ஜெவாலியாவை தொடர்பு கொண்டேன். இதையடுத்து ராஜஸ்தானிலிருந்து ஒட்டகப் பாலை லூதியானாவில் இருந்து பாந்த்ரா வரை இயங்கும் ரயில் நம்பர் 00902 மூலமாக கொண்டு வர முடிவு செய்தோம். அந்த ரயில் ராஜஸ்தானில் உள்ள ஃபால்னா (Falna)

ALSO READ  'நான் காஷ்மீரிலிருந்து ஆரிஃபா' - பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்ட காஷ்மீர் பெண்..!!!

ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் அட்டவணைப்படி அந்த இடத்தில் ரயில் நிறுத்தப்படாது ஒட்டகப் பாலுக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பாந்த்ராவில் உள்ள அந்த பெண்மணியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வர்த்தக நோக்கத்தில் சிந்திக்க முடியாது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் நாங்கள் இதை செய்தோம் என்று கூறியுள்ளார்.

ரயில் ஃபால்னாவில் நிறுத்தி அங்கிருந்து ஒட்டகப் பாலை எடுத்து வருவது குறித்து முன்னதாக Chief Commercial Inspector அகில் தனேஜாவிடம் கூறினோம். அதன் மூலம்தான் ஒட்டகப்பால் மும்பை கொண்டு வரப்பட்டது.

ஆட்டிசம் மற்றும் உணவு ஒவ்வாமை பாதிப்பால் இக்கட்டிலிருந்த குழந்தைக்கு 20 லிட்டர் ஒட்டகப்பாலை தக்க நேரத்தில் வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

naveen santhakumar

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் தமிழ்நாடு முதல்வர் சந்திப்பு..

Shanthi

பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..

Shanthi