அரசியல் இந்தியா தமிழகம்

பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசால் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதையடுத்து விவசாயிகளின் நலனும் அவசியமானது என்பதால் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசால் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். மேலும், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

ALSO READ  போபால் - டெல்லி வந்தே பாரத் ரெயில் சேவை!

இந்நிலையில் புதிய விமான நிலையம் அமையப்பெறும் நிலப்பகுதி மற்றும் நீர் நிலைகளை பராமரிப்பதற்கும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும் ஒரு உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும். இதன் மூலம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நீர் தேவை பாதுகாக்கப்படும் என்றும் விமான போக்குவரத்துக்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.350 கூடுதலாக கிடைக்கும். 2028க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை எனில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடையும்.

எதிர்வரும் 35 ஆண்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Glory Casino İncelemesi Türkiye’nin En İyi Casino Sites

Shobika

தர்மபுரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை !

News Editor

கொரோனா 2ஆம் அலையை சிறப்பாக கையாண்ட மாநிலம் தமிழ்நாடு – லோக்கல் சர்கிள் ஆய்வு சொல்லுது

News Editor