இந்தியா

திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்வது பலாத்கார குற்றமாக கருத முடியாது-உயர்நீதிமன்றம் அதிரடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கட்டாக் (Cuttack):- 

திருமணம் செய்வதாக ஒரு பெண்ணிற்கு பொய் வாக்குறுதி அளித்து அவருடன் உடலுறவு கொள்வதை பலாத்கார குற்றமாகக் (Rape) கருத முடியாது என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஒடிசா மாநிலம் கோரபுத் (Koraput) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும், G அச்யுத் குமார் (AchyutKumar) என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் நெருக்கமாக மாறி அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.  

அந்த நபர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த  போலீசார் சம்பந்தப்பட்ட நபரை சட்டப்பிரிவு 376 (IPC 376 பாலியல் பலாத்காரம் (Rape)) இன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதை நீதிபதி பனிகிரகி (Justice Sanjeeb Kumar Panigrahi) விசாரித்தார். அவர் கூறுகையில், பலாத்காரம் என்பதற்கான விளக்கம் சட்டப் பிரிவு 375இல் தெளிவாக ஏழு விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  தோனியின் மகளை பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்த சிறுவன்:
வலது பனிகிரஹி.

1)ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடப்பது, 

2)சம்மதம் இன்றி நடப்பது, 

3)கொலை செய்வதாக மிரட்டி, அல்லது காயப்படுத்தி விடுவதாக மிரட்டி பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது,

4)அந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் (Victim) தனது கணவர் என்று நினைத்து உறவு கொள்வது, 

5)மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது அல்லது மயக்க மருந்து கொடுத்து உறவு கொள்வது பலாத்காரமாகும்.

6)18 வயதுக்கு கீழே உள்ள சிறுமியுடன் உறவு கொள்வது, 

7)தனது சம்மதத்தை தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது ஆகியவை பலாத்கார குற்றம் என்றும் அந்த சட்டப்பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளப் போவதாக நினைத்து உறவு கொண்டுள்ளது பலாத்கார குற்றத்தின் கீழ் வராது. இவ்வாறு குறிப்பிட்டார் நீதிபதி.

மேலும், நீதிபதி கூறுகையில், பொருளாதாரத்தில் உயர்தட்டில் உள்ள ஆண்கள், ஏழைப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, பின்னர் அவர் கர்ப்பம் அடைந்ததும், திருமணம் செய்ய மறுக்கும் போக்கு என்பது அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். ஆனால் இதை பலாத்கார பிரிவின் கீழ் சேர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

இதைத்தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் அச்யுத்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த உலகை எடுத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கும் இந்த  எங்க இருக்கும் நான்கு ஆண்டுகள் பழக்கம் இருந்துள்ளது அந்த இளைஞர் மூலமாக அந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பமடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த இளைஞர் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு சில மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருவை கலைத்து உள்ளார். 

வழக்கம் போல இந்த தீர்ப்புக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் கொந்தளித்து உள்ளனர். இது பெண்களின் கண்ணியத்திற்கும், கௌரவத்திற்கும் எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர் ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இதே போன்ற ஒரு தீர்ப்பை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏன் இந்த மௌனம்?? ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்??பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி…

naveen santhakumar

இந்தியாவில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு;

News Editor

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு !

News Editor