இந்தியா

கொரோனா பரவல்: வடகிழக்கு மாநிலத்தவற்கு எதிரான மனோநிலை… மன்னிப்பு கோரிய கேப்டன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


கொரோனா வைரஸை நாட்டிலிருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்து போராடி வருகிறது. ஆனால் இந்நிலையில்  வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

எனவே அவர்களின் சார்பில் தான் மன்னிப்பு கேட்பதாக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (Sunil Chhetri):-

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள் என்றும் இன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று சுனில் சேத்ரி கூறியுள்ளார். மேலும், இது மிகவும் வெட்கக்கேடானது, அவமானகரமானது என்றும் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மைசூரில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்க இரண்டு நாகாலந்து சேர்ந்த மாணவர்கள் சென்றனர்.  அவர்களை வெளிநாட்டினர் என்று உள்ளே அனுமதிக்கவில்லை, தொடர்ந்து அவர்களிடம் ஆதார் கார்டை கேட்டுள்ளனர் ஆனால் அவர்களிடம் ஆதார் கார்டு இல்லை.

ALSO READ  இணையத்தில் வைரலாகும் தொடர்ந்து 10 மணி நேரம் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவரின் கை புகைப்படம்...

மேலும், கூறிய அவர் நீங்கள் அருணாச்சல பிரதேசத்திலோ, ஆசாமிலோ அல்லது சிக்கிமிலோ இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சிக்கி உள்ள போது அங்கு உள்ளவர்கள் உங்களுக்கு இது போன்று ஏதேனும் தொந்தரவுகள் அளித்தால் எவ்வாறு இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ALSO READ  வாயு சேனா பதக்கம் பெற்ற முதல் பெண் விங் கமாண்டர்!

இந்திய கால்பந்தாட்ட அணியினர் கொரோனா நிவாரண நிதியாக தங்கள் பங்கிற்கு ஒரு பெரும் தொகையை அளித்துள்ளனர். இவர்களில் பலர் தற்போது தான் அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

ஸ்மார்ட் விஷன் கண்ணாடி அரவிந்த் கண் மருத்துவமனை அறிமுகம்

News Editor

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

News Editor