இந்தியா உலகம்

காதலியைத் தேடி 6000 மைல்கள் பயணம் செய்த இந்தியர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உங்கள் காதலிக்கவும், காதலுக்காகவும் எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள். “விண்ணைத்தாண்டி வருவாயா”-ல் கார்த்திக் ஜெஸ்ஸி-ய பார்க்கிறதுக்காக சென்னையிலிருந்து கேரளா வரையும் போனார். சரி நீங்க எவ்வளவு தூரம் போவீங்க.???

இங்கே ஒருத்தர் தனது காதலியை பார்க்க வேண்டி 6000 மைல் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார் அதுவும் சைக்கிளில்..!!!!

சரி, யார் இந்த காவியக் காதல் நாயகன்..???

தனது சைக்கிலுடன்.

இவரது பெயர் பிரத்யும்ன குமார் மகாநந்தியா (Pradyumna Kumar “PK” Mahanandia). இவர் தனது காதலியைப் பார்ப்பதற்காக 6 ஆயிரம் மைல்கள் அதாவது இந்தியாவில் இருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஸ்வீடன் சென்று தனது காதலியை கரம் பிடித்துள்ளார் இந்த ரோமியோ..!!!

இந்த சம்பவம் நடந்தது கிட்டத்தட்ட நாற்பது வருஷத்துக்கு முன்னர்…

இந்தியாவில் உள்ள குக்கிராமம் ஒன்றில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரத்யும்ன குமார் மகாநந்தியா.  இவர் பிறந்த போது உள்ளூர் ஜோசியர் ஒருவர் இவரது ஜாதகத்தை கணித்து தீர்க்கதரிசனம் (Prophecy) ஒன்றினை கூறியுள்ளார். அதாவது பிரத்யும்ன குமார் ஒரு இசைக் கலைஞரை தான் திருமணம் செய்து கொள்வார். அந்தப் பெண்மணியின் தூர தேசத்திலிருந்து வருவார் அந்தப் பெண்மணி ரிஷப ராசியில் (Taurus) பிறந்தவளாக இருப்பாள். மேலும் அவளுக்கு சொந்தமாக ஒரு காடே இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிரத்யும்ன குமார் தனக்கான பெண் தூர தேசத்திலிருந்து தான் வருவாள் என்று உறுதியாக நம்பியுள்ளார்.

வருடங்கள் உருண்டோடியது பிரத்யும்ன குமார் வாலிபனாக வளர்ந்தார். இவர் ஒரு தெரு ஓவியராக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அப்பொழுது அவரது வாழ்வில் அந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியுள்ளது. 

1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அவரது வாழ்க்கையின் அந்த அழகான பயணம் துவங்கி உள்ளது. ஆம், ஒரு பொன் 

நிறமான (Blonde) அழகிய இளம்பெண் நீல நிற நேத்திரங்கள் உடன் இவர் முன்னாள் தோன்றி தன்னை ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டுள்ளார்.

ALSO READ  நான் ஏன் சார் அந்த பொண்ண மட்டும் லவ் பண்ணேன்.??மன்மதனின் கேள்விக்கு பதில் இது தான்..

அந்த இளம் நங்கையின் பெயர் சார்லட் பான் ஸ்கேட் பின் Charlotte Von Schedvin. 

அந்த நாட்களை நினைவுகூரும் பிரத்யும்னன் குமார்:-

நான் வரைந்து கொண்டிருந்தபோது ஓவியம் வரையும் பலகையின் (Easel) முன் அவள் தோன்றிய போது எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மொத்த எடையும் இழந்து மிதப்பது போல் ஒரு உணர்வை அடைந்தேன். அவளது கண்களைப் பார்க்கையில் மிகவும் அழகாக ஆழ்ந்த நீல நிறத்தில் பெரிதாக  வட்டமாக இருந்தது. அப்பொழுது எனக்குத் தோன்றிய உணர்வு அவள் என்னை சாதாரணமாக பார்ப்பதாக தோன்றவில்லை. என்னை உள்ளே ஆழ்ந்து பார்ப்பதாக ஒரு எக்ஸ்ரே மிஷினை போல என்னை ஊடுருவிப் பார்ப்பதாக எனக்கு தோன்றியது. அவள் என்னிடம் “என்னை நீங்கள் ஓவியமாக வரைய முடியுமா”.?? என்று கேட்டாள். அப்பொழுது நான் அடைந்த பதட்டத்தில் என்னால் சரியாக ஓவியத்தை வரைய முடியவில்லை. எனவே நான் சார்லட் இடம் கூறினேன் வேறொரு நாள் வர முடியுமா..?? என்று அதன் பிறகு சார்லட் மூன்று முறை வந்தால் நான் மூன்று ஓவியங்கள் தீட்டினேன்.

அவள் இரண்டாவது முறை வந்தபோதே நான் முடிவு செய்துவிட்டேன், இவள்தான் எனக்காக பிறந்தவள். அந்த தீர்க்கதரிசனம் உண்மையாகப் போகிறது எனக்காக ரிஷப ராசியில் பிறந்த, அந்த தூர தேசத்து பெண் இவள்தான் என்று.

காதலின் சின்னம் தாஜ்மஹால் முன்.

இதை அவளிடம் கூறி விட்டேன் நீ தான் எனக்காக பிறந்தவள் நீ தான் என் வருங்கால மனைவி, நமது சந்திப்பு முன்னரே முடிவு செய்யப்பட்டது என்று அப்பொழுது அவளுக்கு 19 வயது இருக்கும். ஆனால் நான் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடையவில்லை. அவள் எனக்காக ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தால்.

ALSO READ  பெண்கள் நாட்டின் நலனுக்காக ஆறு குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்- மதுரோ..

இதையடுத்து இவர்கள் இருவரும் மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யா-எமி ஜாக்சன்-க்கு ஊரை சுற்றி காட்டுவது போல இரண்டு மூன்று வாரங்கள் ஒன்றாக சுற்றி உள்ளார்கள். மூன்று வாரங்கள் கழித்து சார்லட் ஸ்வீடனுக்கு திரும்பிவிட்டார்.

அப்போ நம்ம ஹீரோவோட காதல்கதை இதோட முடிஞ்சிருச்சா..?? 

அதுதான் இல்லை நம்ம ஹீரோ தீர்மானித்தார் எப்படியும் சார்லட்டை கரம் பிடிப்பேன் என்று. இப்படியே கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. இந்த ஒன்றரை வருடமும் கடிதப் போக்குவரத்து மூலமாக இவர்கள் காதல் வளர்ந்தது.

இதையடுத்து நமது ஹீரோ தன்னிடமிருந்த அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஐம்பது ரூபாய்க்கு செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்கினார். பின்னர் தன் நண்பர்கள் தெரிந்தவர்களின் உதவியுடன் வழி செலவுக்கான சிறிதளவு பணத்தை எடுத்துக் கொண்டு 6000 மைல்கள் பயணத்தை தொடங்கினார் நம் ஹீரோ பிரத்யும்ன குமார். அவர் பயணத்தின்போது அவருக்கு தடைகளாக இருந்தவை அவரது எண்ணங்களும், சந்தேகம்தான்.

இவ்வளவு தூரம் கடினமான பயணம் மேற்கொண்டு சென்ற நமது ஹீரோ கடைசியில் காதலியை கரம்பிடித்தார். அவர்கள் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களானார்கள். பின்னர் பிரத்யும்ன குமார் ஸ்வீடனில் ஒரு பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தால் நாற்பது வருடங்களுக்கு பின் வருகிறார் பிரத்யும்ன குமார் எங்களை விட எங்கள் காதல் வலிமையானது அதுதான் எங்களை சேர்த்து வைத்தது.

Per J. Andersson என்பவர் நமது பிரத்யும்ன குமாரின் காதல் பற்றி “The Amazing Story of the Man Who Cycled From India to Europe for Love”  என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

நாம் நமது லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அந்த லட்சியத்தில் உறுதியாகவும் அந்த லட்சியத்திற்கு உண்மையாக இருந்தால் எல்லாம் கைகூடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3வது முறையாக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்!

naveen santhakumar

கள்ளக்குறிச்சி சம்பவம் – அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

Shanthi

கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு போராடி மகளை மீட்ட தாய்! வீடியோ உள்ளே…

naveen santhakumar