இந்தியா

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த BJP-ஐ சேர்ந்த டிக் டாக் பிரபலம் சோனாலி போகட்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சண்டிகர்:-

டிக் டாக் மூலம் பிரபலமான சோனாலி போகட் என்பவர் அரசு அதிகாரி ஒருவரை கையால் அறிந்தும் செருப்பால் அடித்தும் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். இவர் தற்பொழுது பா.ஜ.க.வில் உள்ளார்.

இந்நிலையில் சோனாலி போகட் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் உழவர் சந்தையில் ஆய்வு (Balsamand Mandi) மேற்கொண்டிருந்தார். அப்போது, விவசாயிகளின் புகார் பட்டியலுடன் சென்று வேளாண் உற்பத்தி சந்தை குழு உறுப்பினர் சுல்தான்சிங்கிடம் புகார் அளித்தார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அரசு அதி்காரியான சுல்தான்சிங்கை, போலீசார் முன்னிலையில் சோனாலி போகாட் செருப்பால் அடித்தும், கையால் அறைந்தும் துவம்சம் செய்தார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!

அந்த வீடியோவில் சுல்தான் சிங் சோனாலி இடம் கெஞ்சி, அவர் அளித்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி மன்றாடுகிறார்.

ALSO READ  டெல்லி செல்லும் முதலமைச்சர்...தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு !

இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்நோய்-ஐ எதிர்த்து நிறுத்தப்பட்டார். என்னதான் டிக் டாக் மூலம் பிரபலம் ஆனாலும்  அந்த தேர்தலில் தேர்தலில் தோல்வியை தழுவினார். 

அதிகாரி மீதே தவறு இருந்தாலும் அவரை தாக்குவதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Kz Официальный Сайт: Казино И Букмекерская Контор

Shobika

வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

naveen santhakumar

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா… 

naveen santhakumar