இந்தியா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷாவுக்கு கோரோனா தொற்று உறுதியானதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்த மருத்துவமனையில் (Medanta Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தற்போது தான் நலமாய் இருப்பதாகவும், சமீப நாட்களில் தன்னை சந்தித்தவர்களை உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே அமித்ஷாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில்:-

ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

அமித் ஷாவுக்கு நிறைய துணை நோய்கள் (Comorbidity) இருப்பதால் அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் மேலும் அவரது உடல் ஆட்சியில் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினர். 

அமித்ஷா சமீபத்தில் மோடியை சந்தித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் நேற்று நடைபெற்ற ‘லோகமானிய’ பாலகங்காதர திலகரின் 100ம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ALSO READ  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா??? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...

கொரோனா வைரஸுக்கு எதிரான முன்கள போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. மேலும் டெல்லி நகரில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரங்குகளை பயமுறுத்த கரடியாக மாறிய மக்கள்

Admin

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar

இடியால் சேதமான தாஜ்மஹால்… 

naveen santhakumar