இந்தியா

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் மேற்கு வங்க முதல்வர்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து நடந்த ஒடிசாவின் பகனாகா பஜார் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் அவர் அளித்த பேசியதாவது, “கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று; நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். நேற்று 40, இன்று 70 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம்.

எங்கள் மருத்துவர்கள் 40 பேர் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். இதுபோன்ற வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்; எனக்குத் தெரிந்த வரை ரயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை; பாதுகாப்பு கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்!” இவ்வாறு அவர் கூறினார்.


Share
ALSO READ  மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய காந்த ரெயில் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைந்தார்..! 

News Editor

Bukmeker şirkəti Mostbet Azərbaycan APP yükləmə

Shobika

Azərbaycanda mərc oyunları şirkəti Baxış və rəylə

Shobika